பணியில் இருந்தபோது வலிப்பு ஏற்பட்டு கட்டிட தொழிலாளி பலி

2018-02-10@ 00:13:49

தாம்பரம்: தாம்பரம் அடுத்த புது பெருங்களத்தூர், எம்கேபி நகர், ஆப்ரகாம் தெருவை சேர்ந்தவர் தண்டபாணி (48). கட்டிட தொழிலாளி. இவர், நேற்று காலை பீர்க்கன்காரணை பகுதியில் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கீழே இருந்து முதல் தளத்திற்கு மணல் மூட்டையை சுமந்தபடி எடுத்துச் சென்றார். அப்போது, திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டு, முதல் தளத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார்.

இதில், தலையில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு  சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தண்டபாணியை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பீர்க்கன்காரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!