கருணாநிதியை சந்திக்கிறார் கமல் | எக்ஸ் வீடியோவுக்கு ஏ சான்றிதழ் | சாட்சிகள் சொர்க்கத்தில்: இலங்கை தமிழ் அகதிகள் பற்றிய படம் | ஒய்.ஜி.மகேந்திரன் மகன் திருமணம்: திரையுலகினர் வாழ்த்து | பெங்களூரில் சர்வதேச திரைப்பட விழா: 22ந் தேதி தொடங்குகிறது | பார்த்திபன் மகள் திருமணத்தில் சீதா பங்கேற்கிறார் | மார்ச் 1ந் தேதி முதல் சினிமா ஸ்டிரைக்: திரையரங்க உரிமையாளர்கள் திருச்சியில் கூடுகிறார்கள் | காலா ரிலீஸ் திடீர் அறிவிப்பு, சரியா ? | கலகலப்பு 2, சுந்தர் சி சம்பளம் 10 கோடி ? | குதிரை ஏறிய சன்னி லியோன் |
ஜீவா நடித்துள்ள கலகலப்பு படம் நேற்று வெளிவந்தது. இதையொட்டி அவர் அளித்த பேட்டி வருமாறு: கலகலப்பு படத்தின் அனுபவம் புதுமையாக இருந்தது. ரொம்ப ஜாலியாக படப்பிடிப்பு நடந்தது. இதற்கு முன் காமெடி படத்தில் நடித்திருந்தாலும் இதில் கலர்புல்லான காமெடி கேரக்டரில் நடித்திருக்கிறேன். சினிமாவுக்கு காசு கொடுத்து வருகிற ரசிகனை இரண்டரை மணி நேரம் சிரிக்க வைக்க வேண்டும் என்பதுதான் படத்தின் நோக்கம். அப்படித்தான் இதன் திரைக்கதையும் வைக்கப்பட்டுள்ளது.
நான் தோல்வி அடைந்த நடிகன் இல்லை. என் படம் தயாரிப்பாளர்களை நஷ்டப்படுத்துவதில்லை. நான் ஜெயிப்பதால்தான் எனக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. நடித்த படம் வெற்றி பெறவில்லை என்றால் வாய்ப்புகள் வராது. ஆனால் நான் வெற்றிகளை வெளியில் சொல்லிக் கொள்வதில்லை. வசூல் கணக்கு காட்டுவதில்லை. என் தயாரிப்பாளர் சந்தோஷமாக இருக்கிறாரா அதுபோதும். நான் நடிகன் தான், பிலிம் மேக்கர் இல்லை.
எல்லா மக்களுக்கும் பிடித்தவனாக இருக்க விரும்புகிறேன். அதனால்தான் எனக்கு தனி ரசிகர் மன்றம் வேண்டாம் என்று சொல்லி விட்டேன். தனி ரசிகர்கள் கூட்டம் உருவானால் அவர்களுக்கு பிடித்தமான படம் பண்ண வேண்டியதிருக்கும். பொதுமனிதனாக இருந்து விட்டால் எல்லோருக்கும் பிடித்த படங்களை கொடுக்க முடியும். எனக்கென்று தனி பாணி எதுவும் கிடையாது. இயக்குனர்கள் என்னை எப்படி பயன்படுத்திக் கொள்கிறார்களோ அதுவே நான். எனக்கு என்ன வரும், என்னால் என்ன செய்ய முடியும் என்பது என்னை விட இயக்குனர்களுக்கு நன்றாக தெரியும்.
அடுத்து கீ படம் வெளிவர இருக்கிறது. கொரில்லா படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விட்டது. இவற்றை முடித்து கொடுத்துவிட்டு ராஜு முருகனின் ஜிப்ஸி படத்தில் நடிக்க இருக்கிறேன். ஜிப்ஸி காதல் படம் தான் ஆனால் அதிலும் ராஜு முருகனின் சமூக அக்கறை இருக்கும். என்றார் ஜீவா.