ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் சஞ்வான் ராணுவ முகாமிற்குள் ஊடுருவிய 2-வது தீவிரவாதியும் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். ராணுவத்துடனான மோதலில் கொல்லப்பட்ட இருவரும் ஜெய்ஷ்-இ-முகமது இயக்க துிவிரவாதிகள் என தெரியவந்துள்ளது. தீவிரவாதிகளிடம் இருந்து கையெறி குண்டுகள், வெடிப்பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்துள்ளனர். முகாமிற்குள் ஊடுருவிய தீவிரவாதிகளைத் தேடும் பணி தொடர்ந்து நடப்பதாக ராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.