முல்லைத்தீவில் கூட்டமைப்புக்கு எதிராக துண்டு பிரசுரம்!

முல்லைத்தீவில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக துண்டு பிரசுரம் இனம்தெரியாத நபர்களால் விநியோகிக்க பட்டுள்ளது.

அதில் பின்னவருமாறு தெரிவிக்க பட்டுள்ளது,

காலம் காலமாக தேசியம் பேசி சுயலாப அரசியல் செய்து வரும் கூட்டமைப்பபை இன்னும் ஆதரிக்க போகிறோமா..? தேர்தலுக்கு முன் ஒரு கதை தேர்தலுக்கு பின் ஒரு கதை . புலிகளுக்கும் கூட்டமைப்புக்கும் சம்மந்தம் இல்லை என்கிறார் சம்மந்தர்.ஆனால் வாக்கு கேக்கும் போது மட்டும் நாங்கள் புலிகளால் உருவாக்கப்பட்ட கட்சி என்று கூறி வாக்கு கேட்க்கிறார்கள்.

முன்னாள் போராளிகளால் உயிருக்கு ஆபத்து என்கிறார் சுமந்திரன். ஆனால் புலிகள் பாட்டை போட்டு வாக்கு கேட்க்கிறது இந்த பரதேசி கூட்டம். இது வரை இவர்கள் தமிழ் மக்களுக்கு செய்த ஆக்க பூர்வமான நடவடிக்கை தான் என்ன? பொங்கலுக்கு தீர்வு தீபாவளிக்கு தீர்வு என்று புளிகிகொண்டு திரியும் கூட்டத்துக்கா நாங்கள் வாக்கு செலுத்த போகிறோம்.

புளொட், ரெலோ எல்லாம் தேசியம் பேச என்ன அருகதை உள்ளது.? 2009 வரையிலும் காட்டி கொடுத்து அப்பாவி மக்களை கொன்றொளித்த நாய்களை எங்கள் தலைமையாக்க போகிறோமா..? மக்களே சிந்தித்து செயர்ப்படுவீர். வாக்கு போடுதல் அனைவரினதும் உரிமை. யாருக்கு போட வேண்டும் என்று உங்களின் சுய சிந்தனையின் படி உங்கள் வாக்கை செலுத்துங்கள் .

தொடர்டர்புடைய செய்திகள்
முல்லைத்தீவில் சிறிலங்கா கடற்படைத் தளத்தை அமைப்பதற்கு 671 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது. தகவல்
முல்லைத்தீவு மாவட்டத்தில் அடையாளம் காணப்படாத மர்மக் காய்ச்சலினால் இதுவரையில் ஒன்பது பேர் உயிரிழந்திருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முல்­லைத்­தீவு
முல்லைத்தீவு, ஒதியமலை கிராமத்தில் 1984.12.02 திகதி அன்று இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 32 அப்பாவி தமிழ் மக்களின் 33 ஆம்