ஜோகன்னஸ்பர்க்: இந்தியாவுக்கு எதிரான 3 ஒருநாள் போட்டியிலும் தென் ஆப்ரிக்கா அணி தோற்ற நிலையில், அடுத்த 3 போட்டிக்கான அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில், காயம் குணமான நிலையில் நட்சத்திர வீரரான டிவில்லியர்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கனவே காயம் காரணமாக டுபிளஸ்சி, டிகாக் இல்லாத நிலையில் டிவில்லியர்சின் வரவு தென் ஆப்ரிக்காவுக்கு புது நம்பிக்கை தருவதாக அந்த அணியின் டுமினி கூறி உள்ளார்.
அணி விபரம்: மார்க்ராம் (கேப்டன்), அம்லா, டிவில்லியர்ஸ், டுமினி, இம்ரான் தஹிர், டேவிட் மில்லர், மோர்ன் மார்கெல், கிறிஸ் மோரிஸ், நிகிடி, பெலுக்வயோ, ரபாடா, ஷம்சி, ஜோன்டோ மற்றும் பெகர்டியன்.