யாழ்ப்பாணம்: இலங்கை சிறையில் இருக்கும் 113 தமிழக மீனவர்களை விடுவிக்க நீதிமன்றங்களுக்கு இலங்கை சட்டத் துறை பரிந்துரை செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இம்மாத இறுதியில் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியா வர உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினால் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடர்ந்து நடந்துவரும் நிலையில் 113 மீனவர்களை விடுவிக்க அந்நாட்டு சட்டத் துறை பரிந்துரை செய்திருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த இரு தினங்களுக்கு முன் சிறையில் அடைக்கப்பட்ட 8 மீனவர்களை தவிர 113 மீனவர்களை விடுதலை செய்ய நீதிமன்றங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த 113 மீனவர்களும் ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை மற்றும் காரைக்கால் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். மீனவர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் விடுதலை செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.