2வது டெஸ்ட் போட்டி 222 ரன்னில் இலங்கை ஆல் அவுட்

2018-02-09@ 00:17:59

தாகா: வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்டில் இலங்கை அணி 222 ரன்னில் ஆல் அவுட்டானது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் வங்கதேசம் 59 ரன்னுக்கு 4 விக்கெட்டை பறிெகாடுத்து தடுமாறுகிறது. இலங்கை, வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி தாகாவில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட் செய்தது. வங்கதேசத்தின் சுழற்பந்து வீச்சாளர்களான அப்துர் ரசாக், தைஜுல் இஸ்லாம் பந்துவீச்சில் இலங்கை வீரர்கள் மளமளவென விக்கெட்டை பறிகொடுத்தனர். துவக்க வீரர் மெண்டிஸ் (68) மற்றும் ரோசன் சில்வா (56) மட்டுேம தாக்குபிடித்து அரைசதம் அடித்தனர். இதன் மூலம் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 222 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ரசாக், இஸ்லாம் தலா 4 விக்கெட் கைப்பற்றினர். முஷ்டாபிகுர் ரஹ்மான் 2 விக்கெட் கைப்பற்றினார்.

அடுத்து களமிறங்கிய வங்கதேச அணியும் தடுமாற்றத்துடனே ஆட்டத்தை தொடங்கியது. தமிம் இக்பால் (4), கேயஸ் (19), மொமிமுல் ஹக் (0), முஷ்பிகுர் ரகிம் (1) ஆகிய 4 விக்கெட்டுகள் பறிபோயின.  ஆட்ட நேர முடிவில் வங்கதேச அணி 22 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 56 ரன்களுடன் உள்ளது. லிதன் தாஸ் 24, ஹசன் மிராஸ் 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இன்று 2ம் நாள் ஆட்டம் நடக்கிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!