அக்காவை கொலை செய்த தம்பி கைது

2018-02-09@ 02:53:23

சென்னை: அக்காவை கழுத்தை நெரித்து கொலை செய்த தம்பி கைது செய்யப்பட்டார்.சென்னை பழவந்தாங்கல் பக்தவச்சலம் நகர் 5 வது தெருவை சேர்ந்தவர் போஸ், டெய்லர். இவரது மூத்த மகள் சாந்தி (38). இளைய மகன் சங்கர்(37).இதில் சாந்தி மனநிலை பாதிக்கப்பட்டவர். நேற்று மாலை சாந்தி, திடீரென சங்கரின் மூக்கில் தாக்கி இருக்கிறார். இதில் ஆத்திரமடைந்த சங்கர் இரும்பு கம்பியால் சாந்தியின் கழுத்தை இறுக்கியுள்ளார். இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் அங்கு வந்த தந்தை போஸ், மகளை நங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அப்போது, சிகிச்சை பலனின்றி சாந்தி இறந்துவிட்டார். இது குறித்து பழவந்தாங்கல் போலீசார் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தி சாந்தியின் தம்பி சங்கரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். சாந்தி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!