சென்னையில் 4ம் நாள் கள ஆய்வு திருப்பூர் வடக்கு, தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

2018-02-09@ 00:20:05

சென்னை: திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் 4ம் நாளாக மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் நேற்று கள ஆய்வு நடத்தி கருத்துக்களை கேட்டறிந்தார். மாவட்ட வாரியாக கட்சி மற்றும் பல்வேறு அணிகளின் நிர்வாகிகளுடன், திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், உடன்பிறப்புகளுடன் கள ஆய்வு என்ற பெயரில் ஆலோசனை நடத்தி கருத்துக்களை கேட்டு அறிந்து வருகிறார். முதல் நாளன்று கோவை மாநகர் தெற்கு, வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகளும், மாலையில் நீலகிரி மாவட்ட நிர்வா கிகளும் கலந்து கொண்டனர். கடந்த 3ம் தேதி 2ம் நாளாக கள ஆய்வு நடந்தது. காலையில் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் முதலில் கோவை வடக்கு மாவட்ட ஊராட்சி, பேரூராட்சி செயலாளர்களை தனியாக சந்தி த்து மு.க.ஸ்டாலின் கருத்துக்களை கேட்டார்.

மாலையில் கோவை தெற்கு மாவட்ட திமுக வினருடன் கள ஆய்வு நடந்தது. நேற்று முன்தினம் 3ம் நாளாக நடந்த கள ஆய்வில் முதலில் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதையடுத்து மாலையில் ஈரோடு தெற்கு மாவட்ட நிர்வாகிகளுக்கான கள ஆய்வு நடை பெற்றது. மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான முத்துச்சாமி மற்றும் நிர்வாகிகள் களஆய்வில் கலந்து கொண் டனர். நேற்று 4ம் நாளாக கள ஆய்வு காலை 9 மணிக்கு தொடங்கியது. காலையில் நடந்த ஆய்வில் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ், திமுக நிர்வாகிகள், ஊராட்சி, பேரூ ராட்சி செயலாளர்கள், அணிகளின் மாவட்ட, துணை அமைப்பாளர்கள், ஒன் றிய, நகர, செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு, பொதுக் குழு உறுப்பினர்கள் பங்கேற் றனர்.

மாலையில் நடந்த ஆய்வில் திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் பத்மநாபன், இளைஞர் அணி செயலாளர் மு.பெ.சாமிநாதன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டார் கள். ஏராளமானவர்கள் கோரிக்கை மனுக்களை பெட்டியில் போட்டனர். 5ம் நாளாக இன்று காலையில் சேலம் கிழக்கு மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் கள ஆய்வை மு.க.ஸ்டாலின் நடத்துகிறார். மாலையில் சேலம் மேற்கு மாவட்டத்திற்கான கள ஆய்வு நடைபெறுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!