சென்னையில் 200 பேட்டரி பேருந்துகள் இயக்க நடவடிக்கை: போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்

2018-02-09@ 18:54:01

டெல்லி: போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் டெல்லியில் நடைபெறும் வாகான கண்காட்சியை பார்வையிட்டார். பின்னர் பேசிய அவர், பேட்டரியில் இயங்கும் பேருந்தை வாங்குவது குறித்து அரசு ஆலோசனை மேற்கொள்வதாக  கூறினார். மேலும் பேட்டரி வாகனங்களில் புதிய தொழில்நுட்பங்கள் பொருத்தப்படும் என்று கூறினார். சென்னையில் 200 பேட்டரி பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

3 நிமிடத்துக்குள் பேட்டரிகளை மாற்றும் பேருந்துகள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன என்று கூறினார். பேட்டரி பேருந்து வாங்க 50 சதவீதம் மானியம் மத்திய அரசு வழங்குகிறது. சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தாதது என்பதால் பேட்டரி பேருந்துகளை அதிக அளவில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்  என்று கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!