நட்சத்திர பட்டாளத்தில் மணிரத்தினம் படம் | காலாவை முதலில் ரிலீஸ் செய்ய ரஜினி உத்தரவு | மீண்டும் அஜித்தை இயக்கும் கெளதம்மேனன் | நானு கி ஜானு ரிலீஸ் தேதி அறிவிப்பு | மணிகர்னிகா சர்ச்சை : கங்கனா விளக்கம் | 102 நாட் அவுட் ரிலீஸ் தேதி அறிவிப்பு | பாலிவுட் நடிகர் மீது உறவுக்கார பெண் பாலியல் புகார் | வண்ணப்படமாகிறது காவல்காரன் | மாரி 2 மலையாள வில்லன் ஏன்..? | 32 ஆண்டுளுக்கு பின் மோகன்லாலுடன் நடிக்கும் நதியா |
கமல்ஹாசன் ஹார்வர்டு பல்லைகழகத்தில் உரையாற்றுவதற்காக அமெரிக்கா சென்றுள்ளார். இந்த பயணத்தில் அவர் வெளிநாட்டில் வாழும் தமிழர்களை சந்தித்துப் பேசுகிறார். அதன் ஒரு பகுதியாக அவர் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசிக்கும் தமிழ் விஞ்ஞானி கே.ஆர்.ஸ்ரீதரை சந்தித்துப் பேசினார். இவர் நமக்கு தேவையான மின்சாரத்தை நாமே தயாரித்துக் கொள்ளும் ப்ளூம் பாக்சை கண்டுபிடித்தவர்.
ஸ்ரீதரை சந்தித்த கமல், இந்த திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்தும் சாத்தியகூறுகள் பற்றி அவருடன் விவாதித்தார். இதுகுறித்து கமல் கூறியதாவது: ப்ளூம் பாக்ஸ் திட்டம் எனக்கு மகிழ்ச்சியை அளித்தது. தமிழ்நாட்டிலும் இந்த திட்டத்தை பயன்படுத்தும் எதிர்காலத்தை என்னால் கணிக்க முடிகிறது. தமிழ்நாட்டில் இந்த திட்டத்தை செயல்படுத்துமாறு கேட்டுக் கொண்டிருக்கிறேன். இதனால் இந்தியாவும், தமிழகம் பெருமையுறும். என்றார்.
டாக்டர் ஸ்ரீதர் கூறும்போது, கமல்ஹாசனை சந்தித்ததில் மகிழ்ச்சி. உலகின் பிற நாடுகளிலும், இந்தியாவிலும் மின் உருவாக்கம் குறித்து அவருடன் விவாதித்தேன். எங்கள் திட்டத்தை உடனடியாக தமிழக கிராமங்களில் செயல்படுத்துமாறு அவர் எங்களை கேட்டுக் கொண்டிருக்கிறார் என்றார்.