நட்சத்திர பட்டாளத்தில் மணிரத்தினம் படம் | காலாவை முதலில் ரிலீஸ் செய்ய ரஜினி உத்தரவு | மீண்டும் அஜித்தை இயக்கும் கெளதம்மேனன் | நானு கி ஜானு ரிலீஸ் தேதி அறிவிப்பு | மணிகர்னிகா சர்ச்சை : கங்கனா விளக்கம் | 102 நாட் அவுட் ரிலீஸ் தேதி அறிவிப்பு | பாலிவுட் நடிகர் மீது உறவுக்கார பெண் பாலியல் புகார் | வண்ணப்படமாகிறது காவல்காரன் | மாரி 2 மலையாள வில்லன் ஏன்..? | 32 ஆண்டுளுக்கு பின் மோகன்லாலுடன் நடிக்கும் நதியா |
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்த மாரி படத்தின் இரண்டாம் பாகமாக மாரி-2 உருவாகி வருகிறது. சாய்பல்லவி, வரலட்சுமி கதாநாயகிகளாக நடிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தென்காசியில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்தப்படத்தில் வில்லன் வேடத்தில் மலையாள நடிகர் டொவினோ தாமஸ் நடிக்கிறார் என்பது தெரிந்த விஷயம் தான்.
மாரி படத்தில் வில்லனாக நடித்த விஜய் ஜேசுதாஸ் அந்தப்படத்தில் தான் அறிமுகமே ஆனார். அதேபோல மாரி-2வுக்கான வில்லனும் தமிழுக்கு புதுமுகமாக இருக்க வேண்டும், அதேசமயத்தில் அந்த கேரக்டரின் வெயிட்டை தாங்கக்கூடிய நடிப்பு அனுபவம் கொண்டவராகவும் இருக்க வேண்டும் என்பதால் தான் நடிகர் டொவினோ தாமஸை தேர்வு செய்தாராம் இயக்குனர் பாலாஜி மோகன்.