கெடிலம் ஆற்றங்கரையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மக்கள் தீக்குளிக்க முயற்சி

2018-02-09@ 15:04:02

கடலூர் : கடலூரில் கெடிலம் ஆற்றங்கரையோர இருக்கக்கூடிய ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 2015ம் ஆண்டு கடலூரில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பினை தொடர்ந்து நீர் வழித்தடங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.இதன்படி கடலூர் கெடிலம் ஆற்றின் கரையை பலப்படுத்துவதற்க்காக அண்ணா பாலம் முதல் தேவானம்ப்பட்டினம் வரையில் இருக்கக்கூடிய ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது.இதற்காக அங்கு குடியிருந்து வரக்கூடிய 330 பேருக்கு மாவட்ட நிர்வாகம் தரப்பில் மூன்று மாதங்களுக்கு முன்பாக நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று கெடிலம் ஆற்றங்கரையோரம் இருக்கக்கூடிய ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடங்கப்பட்டது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் மாற்று இடம் வழங்கக்கோரி மண்ணெண்ணெய்  ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டனர்.இதனால் பாதுகாப்பிற்காக 300க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த எம்சி சம்பத் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!