நட்சத்திர பட்டாளத்தில் மணிரத்தினம் படம் | காலாவை முதலில் ரிலீஸ் செய்ய ரஜினி உத்தரவு | மீண்டும் அஜித்தை இயக்கும் கெளதம்மேனன் | நானு கி ஜானு ரிலீஸ் தேதி அறிவிப்பு | மணிகர்னிகா சர்ச்சை : கங்கனா விளக்கம் | 102 நாட் அவுட் ரிலீஸ் தேதி அறிவிப்பு | பாலிவுட் நடிகர் மீது உறவுக்கார பெண் பாலியல் புகார் | வண்ணப்படமாகிறது காவல்காரன் | மாரி 2 மலையாள வில்லன் ஏன்..? | 32 ஆண்டுளுக்கு பின் மோகன்லாலுடன் நடிக்கும் நதியா |
கடந்த வாரம் ஐதராபாத்தில் கடை திறப்பு விழாவில் கலந்து கொள்ள சென்றார் தமன்னா. அப்போது, அவரது ரசிகர் ஒருவர் அவர் மீது ஷூவை கழற்றி எறிந்தார். இதனால் பெரும் அதிர்ச்சியடைந்தார் தமன்னா. அதையடுத்து அந்த இளைஞரை போலீசார் கைது செய்தபோது, சமீபகாலமாக தமன்னா சரியான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில்லை. அதனால் தான் அப்படி செய்தேன் என்று கூறியிருந்தார்.
இந்தநிலையில், தற்போது அதுகுறித்து ஒரு ஆங்கில பத்திரிகைக்கு தமன்னா பேட்டி அளித்துள்ளார். அதில், பெரும்பாலும் நடிகைகள் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு செல்லும்போது மலர் கொத்துதான் தருவார்கள். ஆனால் இந்த நிகழ்ச்சியில் ஒரு ரசிகர் ஷூவை கொடுத்து வரவேற்றுள்ளார் என்று கூறிய தமன்னா, இந்த சம்பவம் அந்த ஸ்பாட்டில் எனக்கு அதிர்ச்சியாக இருந்தபோதும், பின்னர் அதை ஒரு விளையாட்டாகவே எடுத்துக்கொண்டேன் என்று கூறியுள்ளார்.