வெள்ளக்கோவிலில் முட்செடிகளை வெட்டி போட்டு சாலையை அடைத்த மர்ம நபர்கள்

2018-02-09@ 14:52:45

வெள்ளக்கோவில் : வெள்ளக்கோவில் அருகே மர்ம நபர்கள் சிலர் முட்செடிகளை வெட்டி வந்து ரோட்டில் போட்டு சாலையை அடைத்துள்ளனர். வெள்ளகோவில் வி.பி.எம். எஸ் நகரில் இருந்து ராஜீவ்நகருக்கு செல்லும் 50 அடி அகல ரோட்டில் முள்செடியை வெட்டி கொண்டு வந்து போட்டு மர்ம நபர்கள் சாலையை அடைத்துள்ளனர். நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று மாலை வரை சாலையில் போட்ட முட்செடிகள் அகற்றப்படவில்லை.

இதனால் ராஜீவ் நகர் செல்லும் மக்கள் தங்களது அன்றாட பணிக்கு செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகினர். ரோட்டை அடைத்தவர்களை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுத்து ரோட்டில் போடப்பட்டுள்ள முட்களை நகராட்சி நிர்வாகம் அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!