நட்சத்திர பட்டாளத்தில் மணிரத்தினம் படம் | காலாவை முதலில் ரிலீஸ் செய்ய ரஜினி உத்தரவு | மீண்டும் அஜித்தை இயக்கும் கெளதம்மேனன் | நானு கி ஜானு ரிலீஸ் தேதி அறிவிப்பு | மணிகர்னிகா சர்ச்சை : கங்கனா விளக்கம் | 102 நாட் அவுட் ரிலீஸ் தேதி அறிவிப்பு | பாலிவுட் நடிகர் மீது உறவுக்கார பெண் பாலியல் புகார் | வண்ணப்படமாகிறது காவல்காரன் | மாரி 2 மலையாள வில்லன் ஏன்..? | 32 ஆண்டுளுக்கு பின் மோகன்லாலுடன் நடிக்கும் நதியா |
இரண்டு முறை ஜோடியாக நடித்த மலையாள நட்சத்திரங்களான ஆசிப் அலி மற்றும் அபர்ணா பாலமுரளி இருவரும் மூன்றாவது முறையாக இணைந்து நடித்துவரும் படம் தான் 'பி டெக்'.. இந்தப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக பெங்களூருவில் நடைபெற்று வருகிறது.
இந்தப்படத்தில் கும்பல் நிறைந்த சாலையில் படத்தின் மற்ற நடிகர்களான சைஜூ குரூப், நிரஞ்சனா அனூப் ஆகியோர் நடிக்கும் காட்சிகளை படமாக்கினார் இயக்குனர் மிருதுள் நாயர். அப்போது படத்தில் நடிப்பதற்காக அழைத்துவரப்பட்ட கர்நாடகாவை சேர்ந்த சில ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகள் காட்சிப்படி மேற்கண்ட நடிகர்கள் இருவரையும் துரத்துவது போலவும் அடிப்பது போலவும் நடிக்க சொன்னாராம் இயக்குனர்.
ஆனால் அவர்களோ நிஜமாகவே நடிகர்கள் இருவரையும் தாக்க ஆரம்பித்து விட்டார்களாம். இயக்குனர் கட் சொன்ன பின்னும் கூட நிறுத்தாமல் கட்டுப்பாட்டை மீறிய அவர்கள், படப்பிடிப்பிற்காக கொண்டு வந்த வாகனங்கள் மீதும் கல்வீசி தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் படக்குழுவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.