விஜய் ஹசாரே டிராபி மும்பையிடம் தமிழகம் தோல்வி

2018-02-09@ 00:18:05

சென்னை: விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் தொடரின், சி பிரிவு லீக் போட்டியில் தமிழக அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் போராடி தோல்வி அடைந்தது. ெசன்னை எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரி மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த தமிழக அணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 49.3 ஓவரில் 183 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஷ்வின் 41 ரன் எடுத்தார். கேப்டன் சங்கர் 11 ரன், அபராஜித் 19 ரன், காந்தி டக் அவுட் என விரைவில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
மும்பை தரப்பில் குல்கர்னி 3, ரஞ்சனி, மட்கர் தலா 2, மல்கோத்ரா, தியஸ், துபே தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

அடுத்து களமிறங்கிய மும்பை அணியும் தமிழக பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்து வீச்சால் திணறியது. குறிப்பாக, பேட்டிங்கில் அசத்திய அஷ்வின் பந்துவீச்சிலும் கைகொடுத்தார். அவர் 10 ஓவர் வீசி 35 ரன் மட்டுமே ெகாடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். இதனால் 150 ரன்னில் 6 விக்கெட் பறிகொடுத்த நிலையில் ரஞ்சனி மும்பை அணிக்கு கைகொடுத்தார். பொறுப்புடன் ஆடிய இவர் அரைசதம் அடிக்க மும்பை அணி 48.5 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 184 ரன் எடுத்து வென்றது. ரஞ்சனி 59 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதுவரை விளையாடிய 3 லீக் ஆட்டங்களில் தமிழக அணி 1 வெற்றி, 2 தோல்வியுடன் உள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!