அனைத்து மாநிலங்களிலும் குழந்தைகள் நல வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

2018-02-09@ 15:31:40

புதுடெல்லி: அனைத்து மாநிலங்களிலும் குழந்தைகள் நல வாரியம் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகளுக்கு நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகளை தடுக்க மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது. மேலும் அனைத்து மாநிலங்களிலும் குழந்தைகள் நல வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறார் சீர்திருத்தப் பள்ளிகளில், அவர்களை ஒழுங்குபடுத்தும் சட்டங்கள் அனைத்து மாநிலங்களிலும் முறையாக செயல்படுகிறதா என்பதை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. குற்ற நடவடிக்கைகளில் இளம் சிறார்கள் ஈடுபடுவது தமிழகத்தில் அதிகரித்து வருவதாக சமீபத்தில் தேசிய குற்றப்பதிவு புள்ளிவிவர அறிக்கை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!