நாகேஷ் திரையரங்கிற்கு 19 இடங்களில் கத்தரி போட்ட தணிக்கை | நான் தோல்வி அடைந்த நடிகன் இல்லை : ஜீவா | நிர்வாகிகளுடன் ரஜினி ஆலோசனை நடத்தியது என்ன? | நட்சத்திர பட்டாளத்தில் மணிரத்தினம் படம் | காலாவை முதலில் ரிலீஸ் செய்ய ரஜினி உத்தரவு | மீண்டும் அஜித்தை இயக்கும் கெளதம்மேனன் | நானு கி ஜானு ரிலீஸ் தேதி அறிவிப்பு | மணிகர்னிகா சர்ச்சை : கங்கனா விளக்கம் | 102 நாட் அவுட் ரிலீஸ் தேதி அறிவிப்பு | பாலிவுட் நடிகர் மீது உறவுக்கார பெண் பாலியல் புகார் |
ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவீஸ் தொடங்கி 50 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிறுவனம் எம்.ஜி.ஆர், ரஜினி நடிப்பில் ஏராளமான படங்களை தயாரித்துள்ளது. சத்யா மூவீஸ் தனது 50வது ஆண்டை கொண்டாடும் வகையில் தான் தயாரித்த எம்.ஜி.ஆர் நடித்த இதயக்கனி, ரஜினி நடித்த மூன்று முகம், கமல் நடித்த காக்கி சட்டை படங்களை டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாற்றுகிறது.
அதோடு எம்.ஜி.ஆர் நடித்த கருப்பு வெள்ளை திரைப்படமான காவல்காரன் படத்தை வண்ணப்படமாக மாற்றவும் ஏற்பாடுகள் செய்து வருகிறது. இந்த தகவலை சத்யா மூவீஸ் நிர்வாகியும், ஆர்.எம்.வீரப்பனின் மகனுமான தங்கராஜ் வீரப்பன் தெரிவித்துள்ளார்.
காவல்காரன் படம் 1967ம் ஆண்டு வெளிவந்தது. பா.நீலகண்டன் இயக்கிய இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருடன் ஜெயலலிதா, நம்பியர், நாகேஷ், பண்டரிபாய் நடித்திருந்தார்கள். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார். வி.ராமமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருந்தார். சிறந்த படத்திற்கான தமிழக அரசின் விருது பெற்ற படம். இலங்கையில் 160 நாட்கள் ஓடி சாதனை படைத்த படம்.