வாழ்வில் எதிர்நீச்சல் அடித்து நீச்சல் போட்டிகளில் தங்கம் வென்ற மாற்றுத்திறனாளிகள்

2018-02-09@ 15:55:11

* மேலும் சாதிக்க அரசு உதவுமா?

செம்பட்டி : வாழ்வில் எதிர் நீச்சல் போட்டு நீச்சல் போட்டிகளில் தேசிய அளவில் தங்க பதக்கங்களை பெற்ற மாற்றுத்திறனாளிகள், மேலும் சாதிக்க அரசு உதவ கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே சங்கராபுரத்தை சேர்ந்த ஜான் பீட்டர் மகன் ஆரோக்கிய ஸ்டீபன். பிளஸ் ஒன் மாணவர். 40 சதவீத கால் நடக்க முடியாத மாற்றுத்திறனாளியான இவர் மாநில அளவிலும், தேசிய அளவிலும் நீச்சல் போட்டிகளில் பங்கேற்று 4 தங்க பதக்கங்களும், ஏராளமான சான்றிதழ்களும் பெற்றுள்ளார். இவரது கோரிக்கை அரசு உதவ வேண்டும் என்பதே ஆகும்.

அதேபோல் அருகில் 2 கி.மீ தூரத்தில் உள்ள கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ் (18). இவர் 80 சதவீத மாற்றுத்திறனாளி. தவழ்ந்தே செல்கிறார்.
இவர் வாழ்வில் எதிர் நீச்சல் போட்டு நீச்சல் பயின்று மாநில அளவிலும், தேசிய அளவிலும் 22 தங்க பதக்கங்களையும், கட்டுகட்டாக சான்றிதழ்களும் பெற்றுள்ளார். இவர் ஒலிம்பிக் போன்ற போட்டிகளில் பங்கேற்று தங்கமாரியப்பனை போல சாதனை படைக்க விரும்புகிறார். ஆனால் பொருளாதார பற்றாக்குறை தடுப்பதால், அரசு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மாற்றுத்திறனாளிகள் இருவரும் எங்களுக்கு ஊனம் என்பது தடையில்லை, நாங்கள் சாதிக்க வானமே எல்லை என்கின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!