சென்னை : முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சசிகலாவின் அண்ணன் மகன் விவேக்கிற்கு விசாரணை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டது.
இந்த கமிஷன் கடந்த 6 மாதங்களாக பலரை நேரில் அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கக்கூடிய சசிகலாவிற்கும் விசாரணை ஆணையம் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் சசிகலாவின் அண்ணன் மகனான விவேக் வரும் 13 அல்லது 14ம் தேதி விசாரணை ஆணையம் முன்பாக நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
தன்னுடைய தரப்பு விளக்கத்தை தர வரும்போது தொடர்பான ஆவணங்கள் இருந்தால் சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே வரும் 12ம் தேதி சசிகலாவின் உதவியாளர் கார்த்திகேயனும், வரும் 14ம் தேதி ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக இருந்த ஐயப்பனும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.