தெலுங்கு, ஹிந்தியிலும் வெளியாகும் மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானம் | தமிழ் படத்தில் நடிக்க சன்னி லியோனுக்கு எதிர்ப்பு: போலீசில் புகார் | ராஜ் டி.வியில் ஜெயலலிதா சகாப்தம் | ஏன் இந்த கோபம்? | நாகேஷ் திரையரங்கிற்கு 19 இடங்களில் கத்தரி போட்ட தணிக்கை | நான் தோல்வி அடைந்த நடிகன் இல்லை : ஜீவா | நிர்வாகிகளுடன் ரஜினி ஆலோசனை நடத்தியது என்ன? | நட்சத்திர பட்டாளத்தில் மணிரத்தினம் படம் | காலாவை முதலில் ரிலீஸ் செய்ய ரஜினி உத்தரவு | மீண்டும் அஜித்தை இயக்கும் கெளதம்மேனன் |
விக்ரம் நடிப்பில் துருவ நட்சத்திரம் படத்தை இயக்கி வருகிறார் கெளதம்மேனன். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடக்கிறது. இந்த படத்தை அடுத்து அருண் விஜய் நடிக்கும் படத்தை இயக்கும் கெளதம் மேனன், அந்த படத்தை முடித்ததும், ஏற்கனவே தான் இயக்கிய ஹிட்டடித்த காக்க காக்க, என்னை அறிந்தால் உள்ளிட்ட சில படங்களின் இரண்டாம் பாகங்களை இயக்க எண்ணம் இருப்பதாக கூறினார்.
அந்த வகையில், அவர் என்னை அறிந்தால் படத்தின் இரண்டாம் பாகத்தை தான் முதலில் இயக்குவார் என்று சொல்லப்படுகிறது. என்னை அறிந்தால் படத்தில் அஜித் நடித்து வந்தபோது இரண்டாம் பாகத்தின் கதையை அவரிடம் சொல்லி ஓகே பண்ணி வைத்திருக்கிறாராம் கெளதம்மேனன். அதனால், விசுவாசம் படத்திற்கு அடுத்தபடியாக அஜித்தை கெளதம்மேனன் இயக்குவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக தெரிகிறது.