வியாபாரிகள் போல நடித்து மோசடி : வெள்ளி கட்டிகள், சொகுசுகார்கள் பறிமுதல்...4 பேர் கைது

2018-02-09@ 02:11:19

சேலம்: சேலம் ஆண்டிப்பட்டி பனங்காடு பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகர் ராஜமாணிக்கம் மகன் செல்வபிரகாஷ். இவர், தனது நண்பர்களுடன் சேர்ந்து வெள்ளி தொழில் செய்து வந்தார். இவர்களிடம் கரூரைச்சேர்ந்த சக்திவேல், விக்னேஷ், சதிஷ்குமார், திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ராமச்சந்திரன், சிங்கதுரை ஆகியோர் 500 கிலோ வெள்ளிக்கட்டிகளை வாங்கினர். ஆனால் பணம் கொடுக்காமல் ஏமாற்றியதோடு, தலைமறைவாகி விட்டனர். இதுகுறித்து செல்வபிரகாஷ் சேலம் மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார்.

இதையடுத்து மோசடி கும்பலை கூண்ேடாடு பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் கரூரைச்சேர்ந்த விக்னேஷ் என்பவரை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில், கும்பலின் தலைவனான சின்னதாராபுரத்தை சேர்ந்த சக்திவேல்(45) என்பவரை கைது செய்தனர். மேலும் ராமச்சந்திரன், சிங்கதுரை, சதிஷ்குமார் ஆகியோரும் பிடிபட்டனர். இவர்களிடம் இருந்து 208 கிலோ வெள்ளிகட்டி, 2 சொகுசு கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு ₹1 ேகாடியாகும். கைதான 4 பேரையும் சேலம் 5வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!