அமெரிக்காவில் இருந்து விண்வெளிக்கு அனுப்பப்பட்ட டெஸ்லா காரின் பாதை மாறியது!

2018-02-09@ 15:21:33

கேப் கேனவரல்: அமெரிக்காவில் உலகிலேயே மிகப்பெரிய மற்றும் சக்தி வாய்ந்த பால்கான் ஹெவி ராக்கெட்டை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்ணில் செலுத்தியது. வழக்கமாக ராக்கெட்டுக்களில் செயற்கைக்கோள் வைத்து அனுப்பப்படும். ஆனால், இது சோதனை ராக்கெட் என்பதால் செயற்கைகோளுக்கு பதிலாக தலைமை நிர்வாக அதிகாரி எலன் மஸ்கின் டெஸ்லா ரோட்ஸ்டரின் கார் வைத்து செலுத்தப்பட்டது. அந்த கார், செவ்வாய் மற்றும் பூமிக்கு இடையேயான சுற்றுப்பாதையில் சுற்றி வரும் வகையில் திட்டமிடப்பட்டு இருந்தது. 6 மாதங்களில் செவ்வாய்க்கு அருகே செல்லும் என்றும் கணிக்கப்பட்டிருந்தது.

இந்த ராக்கெட் செலுத்தப்பட்டதை அமெரிக்காவின் விண்வெளி நிறுவனமான நாசா கண்காணித்து வருவதாகவும், தனது திட்டங்களை விரைவுபடுத்துவதற்கான ஒரு வழியாக பால்கன் ஹெவியை பயன்படுத்து வது குறித்து பரிசீலிக்கலாம் என்றும் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அதிக உந்து சக்தி காரணமாக அந்த கார் நிர்ணயிக்கப்பட்டு இருந்த தடத்தை கடந்து அதிக தூரம் சென்று விட்டது. செவ்வாய் சுற்றுவட்டப் பாதைக்கு அப்பால் சென்ற அந்த கார், தற்போது விண்வெளியில் மிகவும் தூரமான ஆஸ்டீராய்ட் பெல்ட் பகுதிக்கு சென்று கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!