கேரளாவில் வெளியாகும் நாச்சியார் | 4 ஆண்டுகளுக்கு பின் மலையாளத்தில் சுகன்யா | நிவின்பாலியின் நடிப்பை பாராட்டிய பிருத்விராஜ் | முதல்நாளில் ரூ.10.25 கோடி வசூலித்த பேட் மேன் | பிரியங்கா சோப்ராவின் முதல் அசாம் படம் அறிவிப்பு | தில் ஜூங்கிலி ரிலீஸ் தள்ளி வைப்பு | ராசியுடன் மோதும் பிரை டே | தனுஷின் ஹாலிவுட் பட டீஸர் வெளியானது | பிகினியில் சமந்தா : விமர்சித்தவர்களுக்கு பதிலடி | சிம்பு படத்தின் கதையிலா சூர்யா? |
மோகன்லால் தற்போது நடித்து வரும் புதிய படம் 'நீராளி'. இந்தப்படத்தில் பார்வதி நாயர், நதியா இருவரும் முக்கிய வேடங்களில் நடித்தாலும் படத்தில் மோகன்லாலுக்கு கதாநாயகியே இல்லை. இதில் என்ன ஆச்சர்யம் என்றால் கடந்த 32 ஆண்டுகளுக்கு முன்பு மோகன்லால் நடித்த 'நோக்கெத்த தூரத்து கண்ணும் நட்டு' படத்தில் தான் கதாநாயகியாக அறிமுகமானார் நதியா.
அதன்பின் இன்னும் மூன்று படங்களில் மோகன்லாலுடன் இணைந்து நடித்தாலும், இதில் எதுவுமே மோகன்லாலுக்கு ஜோடியாக நதியா நடிக்கவில்லை. இப்போது பல ஆண்டுகளுக்கு பின்னர் இணைந்து நடிக்கும் 'நீராளி' படத்திலும் அவர் மோகன்லாலுக்கு ஜோடியாக நடிக்கவில்லை என்பதும் இன்னொரு ஆச்சர்யம் தான்.
தவிர மும்பையில் வசித்துவரும் நதியாவுக்கு இத்தனை வருடங்களில் அவர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முதன்முறையாக அவரது ஊரான மும்பையில் நடைபெறுவதில் கூடுதல் சந்தோஷமாம்.