காலா ரிலீஸ் தேதி(ஏப்.27)அறிவிப்பு | கேரளாவில் வெளியாகும் நாச்சியார் | 4 ஆண்டுகளுக்கு பின் மலையாளத்தில் சுகன்யா | நிவின்பாலியின் நடிப்பை பாராட்டிய பிருத்விராஜ் | முதல்நாளில் ரூ.10.25 கோடி வசூலித்த பேட் மேன் | பிரியங்கா சோப்ராவின் முதல் அசாம் படம் அறிவிப்பு | தில் ஜூங்கிலி ரிலீஸ் தள்ளி வைப்பு | ராசியுடன் மோதும் பிரை டே | தனுஷின் ஹாலிவுட் பட டீஸர் வெளியானது | பிகினியில் சமந்தா : விமர்சித்தவர்களுக்கு பதிலடி |
அவ்வளவு எளிதாக தெலுங்கு நடிகர்கள் உள்ளே நுழைய முடியாத மலையாள திரையுலகில் மலையாள முன்னணி நடிகர்களின் படங்கள் போல அல்லு அர்ஜுன் படங்களுக்கும் மவுசு இருக்கிறது. அதனால் தெலுங்கு நடிகர்களில் அல்லு அர்ஜூன் படங்கள் மட்டுமே தொடர்ச்சியாக கேரளாவில் டப்பிங் செய்யப்பட்டு அங்கேயும் வசூலை குவித்து வருகின்றன.
அந்தவகையில் தற்போது அல்லு அர்ஜூன் நடித்துவரும் 'நா பேரு சூர்யா' படம், 'எண்டே பேரு சூர்யா' என்கிற பெயரில் மலையாளத்தில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது. தவிர இந்தப்படத்தில் கேரளாவை சேர்ந்த அனு இம்மானுவேல் கதாநாயகியாக நடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதன் முன்னோட்டமாக இந்தப்படத்தின் மலையாள வெர்ஷன் டீசரை சமீபத்தில் வெளியிட்டுள்ளனர். இன்னொரு பக்கம் அல்லு அர்ஜூனின் கேரளா ரசிகர்களும் இப்போதே படத்திற்கான புரமோஷன் வேலைகளில் இறங்கிவிட்டார்கள்.