நாட்டில் முதன்முறையாக பிஎஸ்என்எல் 4ஜி சேவை கேரளாவில் தொடக்கம்

2018-02-09@ 01:56:30

திருவனந்தபுரம்: இந்தியாவில் முதல் முறையாக பிஎஸ்என்எல் 4ஜி சேவை ேநற்று முதல் கேரளாவில் தொடங்கியது. இந்தியா முழுவதும் தனியார் செல்போன் நிறுவனங்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே 4ஜி சேவையை தொடங்கிவிட்டன. ஆனால் அரசு பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் இதுவரை 4ஜி சேவையை தொடங்காமல் இருந்தது. இது தொடர்பாக பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் பிஎஸ்என்எல் 4ஜி சேவை அளிக்க பிஎஸ்என்எல்லும் முன் வந்துள்ளது. இந்தியாவில் முதன்முறையாக கேரளாவில் 5 டவர்களில் 4ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது. இடுக்கி மாவட்டத்தில் உடும்பன் சோலை, உடும்பன்சோலை டவுண், கல்லுபாலம், செம்மண்ணார், மற்றும் சேனாபதி ஆகிய 5 டவர்களில 4ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது.

 நேற்று பிஎஸ்என்எல் தலைமை நிர்வாக இயக்குனர் அனுபம் வஸ்தவாவை அழைத்து முதல் சேவை தெடங்கி வைக்கப்பட்டது. விரைவில் கேரளாவில் பிற பகுதிகளுக்கும் 4 ஜி சேவை தொடங்கும் என்று பிஎஸ்என்எல் கேரள தலைமை பொதுமேலாளர் மேத்யூ திருவனந்தபுரத்தில் தெரிவித்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!