ஏழைகளுக்கு சலுகைகளை மறுக்க கூடாது கோர்ட் கண்டிப்பு Dinamalar
பதிவு செய்த நாள் :
கண்டிப்பு!
ஏழைகளுக்கு சலுகைகளை மறுக்க கூடாது
'ஆதார்' வழக்கில் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

புதுடில்லி : 'ஆதார் இல்லை என்பதற்காக, வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கு,சமூக பாதுகாப்பு திட்டங்களின் சலுகைகளை மறுக்கக் கூடாது; ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உட்பட, வேறு எந்த அடையாள அட்டைகளையும் காட்டி, திட்டங்களின் சலுகைகளை பெற, அவர்களை அனுமதிக்க வேண்டும்' என, மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஏழைகள், சலுகைகள், ஆதார் , ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, மத்திய அரசு, உச்ச நீதிமன்றம் , தனிநபர் சுதந்திரம், அடிப்படை உரிமை, நீதிபதி தீபக் மிஸ்ரா,  Aadhar, ration card, voter identity card,
Federal Government, Supreme Court, Individual Freedom, Fundamental Rights, Judge Deepak Mishra,



'அரசு சார்பில் அமல்படுத்தப்படும், சமூகநலத் திட்டங்களின் மானியம் உள்ளிட்ட சலுகைகளை பெற, ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்' என, மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.'வங்கிக் கணக்கு, மொபைல் போன் சேவைகளை பெற, ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்கவேண்டும்' என, கெடு விதிக்கப்பட்டு உள்ளது.

அடிப்படை உரிமை



இதை எதிர்த்தும், ஆதார் திட்டம் மற்றும் ஆதார் சட்டத்தை எதிர்த்தும், உச்ச நீதிமன்றத்தில், பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. 'தனிநபர் சுதந்திரம் அடிப்படை உரிமை தான் என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளதை அடிப்படையாக வைத்து, ஆதார் வழக்கை விசாரிக்க வேண்டும்' என, மனுதாரரர்கள் தரப்பில் கோரப்பட்டு உள்ளது.

இந்த மனுக்கள் மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையில், நீதிபதிகள், ஏ.கே.சிக்ரி, ஏ.எம்.கன்வில்கர், சந்திரசூட், அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய, அரசியல் சாசன அமர்வு முன் நடக்கிறது.

நேற்று நடந்த விசாரணை யின் போது, மனுதாரர் ஒருவர் சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர், கபில் சிபல் வாதிட்டதாவது:அரசின், சமூக பாதுகாப்பு திட்டங்களின் பலன்களை பெற, ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

ஆதார் இல்லையென்றால், சமூக பாதுகாப்பு திட்டங்களின் சலுகைகளை, வறுமை கோட்டுக்கு கீழ் வாழும், ஏழை மக்களால் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பாதுகாப்பு



அடிப்படை தேவைகளான, ஊட்டச்சத்து, பள்ளிகளில் மதிய உணவு, விதவைஓய்வூதியம் உட்பட, பல சமூக பாதுகாப்பு திட்டங்களின் பலன்கள், ஆதார் இல்லையென்ற காரணத்துக்காக மறுக்கப்படும் நிலை உருவாகி உள்ளது.ஆதார் இல்லையென்றாலும், வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்பவர்களுக்கு, சமூக பாதுகாப்பு திட்டங்களின் சலுகைகள் வழங்கப்பட வேண்டும். ஆதார் இல்லையென்றால், மக்களுக்கு அடிப்படை தேவைகளை வழங்குவதற்கான, மாற்று வழியை ஏற்படுத்த வேண்டும் என, மத்திய அமைச்சரவை செயலர், ஏற்கனவே உத்தரவிட்டு உள்ளார்.

மாற்று வழியை உருவாக்கும் வரை, ஆதார் இல்லையென்பதற்காக, யாருக்கும் சமூகநலத் திட்டங்களின் பலன்களை மறுக்கக் கூடாது. இது தொடர்பாக, நீதிமன்றம், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு அவர் வாதிட்டார்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், துஷார் மேத்தா கூறியதாவது:நாட்டில், 96 சதவீத மக்களுக்கு, ஆதார் வழங்கப்பட்டு விட்டது. இன்னும், 4 சதவீதம் பேர் மட்டுமே, ஆதார் பெறவில்லை. ஆதார் இல்லையென்பதற்காக, யாருக்கும், எந்த சலுகையும் மறுக்கப்பட மாட்டாது; மறுக்கப்படவும் இல்லை.

ஆதார் இணைப்புக்கான காலக்கெடு, மார்ச், 31 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதனால், இந்த விவகாரத்தில், நீதிமன்றம், எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க வேண்டியஅவசியமில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.இதையடுத்து, நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:ஆதார் இல்லை என்பதற்காக, யாருக்கும், எந்த சலுகையையும் மறுக்கக் கூடாது. சமூகநலத் திட்டங்களின் சலுகைகளை பெற, வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்கள் அனைவருக்கும் உரிமை உள்ளது.
ஆதார் இல்லையெனில், ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உட்பட, வேறு அடையாள அட்டைகள் மூலம், அவர்களுக்கு சமூகநலத் திட்டங்களின் சலுகைகளை வழங்க வேண்டும்.

Advertisement


விசாரணை



வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்கள் பலருக்கு, மாற்று அடையாள அட்டையை காட்டி,திட்டங்களின் சலுகைகளை பெறலாம் என்ற, விழிப்புணர்வு இருக்காது.எனவே, ஆதார்இல்லையென்றால், வேறு ஏதாவது ஓர் அடையாள அட்டையை காட்டி, சலுகைகளை பெற முடியும் என்பதை தெரிவிக்கும் வகையில், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.

கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அளித்த வாக்குறுதியை, நீதிமன்றம் ஏற்கிறது. அதனால், இந்த விவகாரத்தில், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.இதையடுத்து, விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.
'ஆதார்' இணைப்பு திட்டங்கள் கீழ்கண்ட விஷயங்கள் மற்றும் திட்டங்களுக்கு, ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
• வங்கிக் கணக்கு
• சமையல், 'காஸ்'
• 'பான்' அட்டை
• மொபைல் சிம் கார்டு
• இறப்பு சான்றிதழ்
• விதவை ஓய்வூதியம்
• பள்ளி மதிய உணவு திட்டம்
• அடல் ஓய்வூதிய திட்டம்
• ஓட்டுனர் உரிமம்


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chanemougam Ramachandirane - pondicherry ,இந்தியா
09-பிப்-201809:20:58 IST Report Abuse

Chanemougam Ramachandiraneநீதிமன்றம் முதலில் சட்டம் அனைவருக்கும் சமம் என்பதிலிருந்து விலகுகிறது மேலும் சலுகைகள் ஏழைகள் பெறுவது நியாயம் ஆனால் அரசு கொடுக்கும் சலுகைகள் ஏழைக்கு சென்றைடைகிறதா என்று நீதிமன்றம் உத்திரவாதம் கொடுக்க முடியாது ஏன் என்றால் ஓட்டு வங்கிக்காக சலுகைகள் ஏழை இல்லாதவர்களுக்கும் சென்றைடைகிறது முதலில் நீதிமன்றம் ஏழை யார் யார் என்பதை அவர்கள் ஓதியும் வருமானம் எவ்வளவு இருக்கவேண்டும் ஆகியவைகளை நிர்ணயுங்கள் மேலும் பெறுபவர் ஆதார் பெறுவது ஒன்னும் சிரமும் இல்லை இதே நீதிமன்றம் வங்கிக்கு ஆதார் வங்கியில் பதிவு செய்து கொள்ளலாம் என்று நடைமுறை படுத்தியது அதே போல் இவர்களுக்கும் அதே போல் ஆதார் பெற்று இணைத்து கொண்டால் மூன்றாவது நபர் பெற முடியாது சலுகைகளை என்பதினை உணர்ந்து அரசு மக்கள் வரி பணத்தை வீணாகாமல் இருக்க தீர்ப்பை மாற்றி இனிமேல் ஆதார் பட்டா முதல் சொத்து விவரங்கள் பதிவது வரைமற்றும் அரசு சலுகைகள் பெற்றால் அவசியம் தேவை என்பதினை உணர்ந்து நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் இல்லையென்றால் நீதிமன்றத்தில் தேவையில்லாத வசகுகள் வந்து பளு சேர்க்கும் அதற்கு நீதிமன்றமே பொறுப்பு ஒரு பக்கம் அரசு எடுத்த முடிவு என்று சொல்கிறீர்கள் தீர்ப்பில் மறுபக்கம் அரசு எடுத்த முடிவு தவறு என்று கூறி மக்களை குசப்புகிறீர்கள்

Rate this:
தங்கை ராஜா - tcmtnland,இந்தியா
09-பிப்-201809:00:54 IST Report Abuse

தங்கை ராஜாஏழைகளின் வயிற்றில் அடிப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். ஆதார் மட்டுமே பிரச்சினை இல்லை. மத்திய ஆட்சியாளர்களின் இரட்டை வேட நடிப்பு தான் ஏழை நடுத்தரர்களை தரித்திரர்களாக்கும் தந்திரம்.

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
09-பிப்-201808:41:56 IST Report Abuse

Srinivasan Kannaiyaநல்லா பெரிய ஒலி பெருக்கியாக வைத்து ஆதாரை கொண்டு வந்து இம்சை செய்பவர்கள் காதில் சொல்லுங்கள்...

Rate this:
balakrishnan - coimbatore,இந்தியா
09-பிப்-201808:41:38 IST Report Abuse

balakrishnanதற்போது சலுகைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்டு வருகிறது, ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டு வருகிறது, நடைமுறையில் நம்மை அடையாளப்படுத்திக் கொள்ள ஒரு ஆவணம் அந்த வகையில் ஆதாரின் தேவை முக்கியம், அரசு அறிவித்துள்ளது போல மீதம் இருக்கும் 4 % மக்கள் எந்த காலத்திலும் ஆதார் அட்டை எடுப்பதற்கு வாய்ப்பில்லை,

Rate this:
suresh - Tirupur,இந்தியா
09-பிப்-201808:24:26 IST Report Abuse

sureshநம் நாட்டில் ஏழை என்று எவரும் இல்லை... தன்னை ஏழை என்று அடையாளப் படுத்தும் முக்கால்வாசி பேர் தினம் ஒரு குவாட்டர் இல்லாமல் உறங்குவதில்லை. திட்டமிட்டு உழைக்க மறுக்கும் சோம்பேறிகளே ஏழை என்ற போர்வையில் அரசை ஏமாற்றுகிறான்.

Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
09-பிப்-201806:56:59 IST Report Abuse

ஆரூர் ரங்வரிப்பணம் தவறானவர்களுக்குப் போய் வீணாவத்தைத் தடுக்க ஆதார் இணைப்பைக் கொண்டு வந்தால் கோர்ட் தடுக்கிறது . இனி இதுபோல வீணாகும் வரிப்பணத்தை நீதிபதிகளாகி கொடுப்பார்கள் ? எதனால் ஆதார் பெறமுடியாத நிலை என கண்டறிந்து அதற்கேற்றாற்போல் விதிகளை மாற்றலாமே தவிர ஆதாரே தேவையில்லை என்பது ஆபத்து

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
09-பிப்-201804:23:33 IST Report Abuse

Kasimani Baskaranஒருவரின் அடையாளத்தை உறுதி செய்வதில் தவறு இல்லை... தவறு செய்பவர்கள்தான் தங்களது அடையாளத்தை மறைக்க இது போல நாடகம் போடுகிறார்கள்...

Rate this:
skv - Bangalore,இந்தியா
09-பிப்-201803:39:17 IST Report Abuse

skv<srinivasankrishnaveni>ஆமாம் ஆமாம் கட்டாயம் செய்யணும்

Rate this:
அன்பு - தஞ்சை,இந்தியா
09-பிப்-201802:40:58 IST Report Abuse

அன்புஆதார் இல்லையென்பதற்காக, ஏழை குழந்தைகளின் மதிய உணவை மறுப்பது நெஞ்சில் ஈரம் இல்லாத கொடியமனப்பான்மை கொண்டவர்களின் செயல். கொஞ்சமும் ஏற்றுக்கொள்ள முடியாது. பெற்றோர் செய்கின்ற தவறிற்கு குழந்தைகளை பலிகடா ஆக்கமுடியாது. ஆதார் கேளுங்கள். இல்லையென்றால், மீண்டும் கேளுங்கள். அவ்வளவுதான் செய்ய முடியும். மதியஉணவு சாப்பிடும் குழந்தைகள் நடுத்தர மற்றும் மேல்தட்டு குழந்தைகள் அல்ல. ஆதார் இல்லையென்பதற்காக ஒரு கர்ப்பிணி பெண்மணியை உபியில் ஹாஸ்பிடல் வராண்டாவில் தரையில் படுக்க வைத்து, குழந்தை பெற வைத்தனர் என்பது நெஞ்சம் பதைபதைக்க வைக்கும் செயல். இவற்றையெல்லாம் பார்க்கும்போது மத்தியில் ஆளும் பிஜேபியினருக்கும் ஏழைமக்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று மட்டும் புரிகிறது. மனசாட்சி இல்லாதவர்கள் மைனாரிடியாக கூட மீண்டும் ஜெயிக்க முடியாது.

Rate this:
skv - Bangalore,இந்தியா
09-பிப்-201801:33:09 IST Report Abuse

skv<srinivasankrishnaveni>nerru orupenmani irandhuttaar மூன்றுகுழந்தைகள் இன்று அனாதைகளா இருக்கா ,அன்னையின் இறுதி சந்தகுக்கும் நாதியே இல்லேன்னு அந்தக்குழந்தைகளின் எதிர்காலம் ??????????????????/உங்க வீட்டுப்பிள்ளைகள் போல கான்வெண்டுலே வேண்டாம் அரசுப்பள்ளியே படிக்கவைக்க உதவலாமே

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement