கேப்டவுன்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 300 ரன்களை எட்ட வேண்டும் என்பதாலேயே தசைப்பிடிப்பை பொருட்படுத்தாமல் கோலி உறுதியுடன் விளையாடினார். இந்த போட்டியில் கேப்டன் விராட் கோலி நேற்று 3-வது வீரராக களம் இறங்கி இறுதிவரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார். அவர் 159 பந்துகளை எதிர்கொண்டு 160 ரன்கள் எடுத்தார். இதில் 12 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் அடங்கும். கோலி ஒருநாள் போட்டிகளில் அடிக்கும் 34 சதமாகும்.
அவரது ரன் பவுண்டரி மற்றும் சிக்சர் மூலம் 60 ரன்கள் எடுத்தார். மற்ற 100 ரன்களையும் அவர் அனைத்தையும் ஓடிதான் எடுத்தார். ஒரு ரன்களாக 75 முறையும், 2 ரன்களாக 11 தடவையும், 3 ரன்களாக ஒரு தடவையும் எடுத்தார். 100 ரன்களை ஓடி எடுத்த முதல் இந்திய வீரர் கோலி ஆவார். சர்வதேச அளவில் 5-வது வீரர் ஆவார். இதே மைதானத்தில் தென் ஆப்பிரிக்க வீரர் டுபிளிஸ்சிஸ் 103 ரன்களை ஓடி எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோலி அதிகமான பந்துகளை எதிர்கொண்டது இதுவே முதல்முறையாகும். 2012-ம் ஆண்டு நடந்த ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக டாக்கா மைதானத்தில் 148 பந்தில் 183 ரன்கள் எடுத்தார். இந்திய தொடக்க வீரர்களாக களமிறங்கமால் அதிக பந்துகளை சந்தித்தவர் கோலி ஆவார். இதற்கு முன்பு அசாருதீன் 154 பந்தில் 83 ரன்கள் எடுத்து இருந்தார்.