''அ.தி.மு.க., வில், 18 எம்.எல்.ஏ.,க்களின் தகுதி நீக்கம் வழக்கின் தீர்ப்பு வெளிவந்ததும், தமிழக அரசியலில், அதிரடி மாற்றம் நிகழும்,'' என, தி.மு.க.,செயல் தலைவர், ஸ்டாலின் பேசினார்.சென்னை, அறிவாலயத்தில், திருப்பூர் வடக்கு, தெற்கு மாவட்ட, தி.மு.க., நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம், நேற்று நடந்தது.
அதில் பங்கேற்ற, நிர்வாகிகள் பேசியதாவது:கட்சியில் மேல் மட்டம் முதல், கீழ்மட்டம் வரை, ஒரு குறிப்பிட்ட ஜாதியினருக்கு ஆதரவாகவே நிர்வாகிகளும், தொண்டர்களும் செயல்படுகின்றனர்.
கட்சியின் நலனுக்கு முக்கியத்துவம் தராமல், குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்தவர்களுக்கு, கட்சி பதவிகள் வழங்கப்படுகின்றன.
அதனால் தான், தி.மு.க., தோல்வி முகத்தை சந்தித்து வருகிறது. ஜாதி பிரச்னையை சரிசெய்யவில்லை என்றால், அதிருப்தி அடைகிற தி.மு.க.,வினர், தினகரன் அணிக்கு செல்லும் நிலை ஏற்படும்.அதை சரிசெய்யும் விதமாக, சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மகளிர் அணியினருக்கு, அனைத்து தேர்தல்களிலும், 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். மகளிருக்கு முக்கியத்துவம் அளித்தால், தி.மு.க., ஓட்டு வங்கி அதிகரிக்கும்.இவ்வாறு அவர்கள் பேசினர்.
பின், ஸ்டாலின் பேசியதாவது:மாவட்ட அளவில் நிலவும் கோஷ்டி பூசலுக்கு, முடிவு கட்டப்படும். உங்கள் புகார் கடிதங்களை விசாரிக்க, மாவட்டத்திற்கு, ஒரு குழு அனுப்பி வைக்கப்படும்.
அக்குழு விசாரணை நடத்தி, உண்மை நிலவரத்தை தெரிவித்த பின், கட்சி நலனுக்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
மகளிர் நிர்வாகிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அ.தி.மு.க.,வில், 18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு வெளிவந்ததும், தமிழக அரசியலில், அதிரடி மாற்றம் நிகழும். இவ்வாறு அவர் பேசினார்.
- நமது நிருபர் -
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (18)
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply