சுஷ்மா சுவராஜ் சவூதி பயணம்: வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு குறித்து சவுதி மன்னருடன் பேச்சுவார்த்தை

2018-02-08@ 16:02:31

ஜெட்டா: சவூதி அரேபியா சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஸை சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினார். சவூதி அரேபியாவின் கலாச்சார விழா ஒவ்வொரு ஆண்டும் ரியாத் அருகே உள்ள ஜெனத்ரியா என்ற இடத்தில் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளுடன் அந்நாட்டு அரசு நடத்துகிறது. இந்த ஆண்டுக்கான ஜெனத்ரியா கலைநிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு இந்தியாவுக்கு மன்னர் சல்மான் ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்தார்.

இதையடுத்து, அரசு முறை பயணமாக சவுதி சென்றிருந்த மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் இணை அமைச்சர் வி.கே.சிங் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். முன்னதாக அவர் அந்நாட்டு வெளியுறவு அமைச்சரையும் சந்தித்து இந்தியா-சவூதி நட்பின் அடிப்படையில் இரு நாடுகளின் வளர்ச்சித் திட்டங்கள், வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு குறித்து பேச்சு நடத்தியதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!