நட்சத்திர பட்டாளத்தில் மணிரத்தினம் படம் | காலாவை முதலில் ரிலீஸ் செய்ய ரஜினி உத்தரவு | மீண்டும் அஜித்தை இயக்கும் கெளதம்மேனன் | நானு கி ஜானு ரிலீஸ் தேதி அறிவிப்பு | மணிகர்னிகா சர்ச்சை : கங்கனா விளக்கம் | 102 நாட் அவுட் ரிலீஸ் தேதி அறிவிப்பு | பாலிவுட் நடிகர் மீது உறவுக்கார பெண் பாலியல் புகார் | வண்ணப்படமாகிறது காவல்காரன் | மாரி 2 மலையாள வில்லன் ஏன்..? | 32 ஆண்டுளுக்கு பின் மோகன்லாலுடன் நடிக்கும் நதியா |
உனக்கு 20 எனக்கு 18 படத்தில் அறிமுகமான ஸ்ரேயா, விஜய்யுடன் அழகிய தமிழ்மகன், ரஜினியுடன் சிவாஜி ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். சமீபகாலமாக பெரிய மார்க்கெட் இல்லை என்றபோதும், தமிழ், தெலுங்கில் சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் ஸ்ரேயா. இந்த நிலையில், ஸ்ரேயாவுக்கும், அவரது ரஷ்ய பாய் பிரண்டிற்கும் மார்ச் மாதம் திருமணம் நடைபெறயிருப்பதாக பரபரப்பு செய்திகள் வெளியாகின.
ஆனால் அந்த செய்தியை ஸ்ரேயாவின் தாயார் நீர்ஜா மறுத்துள்ளார். அவர் ஒரு ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், ஸ்ரேயாவுக்கு திருமணம் நடைபெறவிருப்பதாக வெளியான செய்தி தவறானது. தற்போது ஸ்ரேயா தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். மேலும், ராஜஸ்தானில் உள்ள ஒரு நண்பர் திருமணத்திற்கு சென்றிருந்தார். அதற்காக டிசைனரிடம் ஜூவல்லரி மற்றும் டிரஸ் ஆர்டர் கொடுத்தார் ஸ்ரேயா.
இப்படி ராஜஸ்தான் நண்பரின் திருமணத்திற்கு செல்வதற்கு ஸ்ரேயா கொடுத்த ஜூவல்லரி, டிரஸ் ஆர்டர் குறித்த தகவல் வெளியானதை அடுத்து, தனது கல்யாணத்திற்காக ஸ்ரேயா கொடுத்தது போன்று மீடியாக்கள் தவறான செய்தி வெளியிட்டுவிட்டன. அதனால் இந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், ஸ்ரேயா கிராமத்து நாயகியாக நடித்துள்ள காயத்ரி என்ற தெலுங்கு படம் நாளை வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது.